7 பெண்களை காதலித்து பிரபல நடிகையின் வாழ்க்கையை சீரழித்த கமல்!

ஒரே பெண்களை ஏழு நேரத்தில் காதலித்தாகவும் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை சீரழித்ததாகவும் கமல்ஹாசன் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டே போகின்றார் குட்டி பத்மினி.

உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.

இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.

இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர். தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக நடித்து வந்தவர்தான் இவர்.

அக்காலத்தில் பல நடிகைகளுடன் பல கிசு கிசு தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.

ஏழு நடிகைகளை காதலித்த கமல்
இந்நிலையில் கமல்ஹாசனின் காதல் கதைகளை யூடியூப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் நடிகை குட்டி பத்மினி. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது,

தமிழில் பெயர் போன நடிகையாக இருந்த ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இவ்வாறு படங்களில் நடிக்கும் போது ஸ்ரீவித்யாவிற்கு கமல்ஹாசன் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது.

ஆனால் அந்த சமயத்தில் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் ஸ்ரீவித்யா உட்பட பொலிவூட் நடிகை ரேகா, வாணி கணபதி, ஸ்ரீசுதா என ஏழு பெண்களை காதலித்திருக்கிறார்.

ஸ்ரீவித்யா கமல்ஹாசனை காதலித்து வந்தார் ஆனால் அவர் வாணி கணபதியை திருமணம் செய்துக் கொண்டார். இதனால் மனமுடைந்துப்போனார் ஸ்ரீவித்யா.

இந்த சம்பவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவருக்கு அந்த திருமணத்தில் ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது. ஸ்ரீவித்யாவின் கணவரை அவரை ஏமாற்றி விட்டு சொத்துக்களை எல்லாம் அபகரித்து விட்டார்.

இதிலிருந்தும் மீண்டு வந்த ஸ்ரீவித்யா சினிமாவில் கவனம் செலுத்த அடுத்த பிரச்சினையாக புற்றுநோய் எனும் கொடிய நோயில் சிக்கிக் கொண்டார்.

இந்த நோய்க்குப் பிறகு தனிமையாகிக் கொண்ட ஸ்ரீவித்யா யாரையும் சந்திக்க விரும்பாமல் கமல்ஹாசனை மாத்திரம் சந்திக்க விரும்பியிருக்கிறார்.

அதன்படி கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார். பிறகு கொஞ்ச காலமாக நோயுடன் போராடி வந்த ஸ்ரீவித்யா யாரும் இல்லாமல் அநாதையாக இறந்து போய் விட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *