அந்த படத்திற்கு பிறகு தான் கமலின் நடவடிக்கைகள் மாறியது கெளதமி அதிர்ச்சி தகவல்!

கமலை விட்டு பிரிவதற்கு காரணம் இதுதான் என்று கௌதமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார் கமல்ஹாசன். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார். இவர் சினிமா துறையில் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியது.

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதை போலவே செய்வதும், சண்டைக்காட்சிகள், சாகச காட்சிகள் என எதுவுமே இருந்தாலும் டூப் போடமால் நடிப்பார். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவருடைய நடிப்பு திறமைக்காக இவர் வாங்காத விருதுகளே இல்லை.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படி கமல் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் தோல்வி அடைந்தார் என்று சொல்லலாம். இவருடைய சொந்த வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் இருந்த போது பல நடிகைகளுடன் காதலில் இருந்தார் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு கமலும் ஆமாம் என்று பேட்டியிலும் கூறியிருந்தார்.

இவர் முதலில் வாணி கணபதி என்ற பரதநாட்டிய கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு சில வருடங்களில் இவர்கள் பிரிந்து விட்டார்கள். அதற்குப் பின் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன்பின் நடிகை கௌதமியை திருமணம் செய்யாமலேயே தன்னுடைய வீட்டில் சில காலம் கமல் தங்க வைத்து இருந்தார். இருவரும் சேர்ந்து பாபநாசம் படத்தில் கூட நடித்து இருந்தார்கள்.

கௌதமி அளித்த பேட்டி:

அதற்குப்பின் சில காலங்களிலேயே கௌதமி கமலை விட்டு பிரிந்து விட்டார். இது குறித்து கூட சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளப்பினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் கௌதமி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தான் கமலை விட்டு பிரிந்தது குறித்து கூறியது, நான் கமலஹாசன் உடன் இருந்த இறுதி நாட்களில் என்னுடைய சுயமரியாதை இழந்து தான் வாழ்ந்தேன். நான் கமலஹாசன் உடைய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறேன்.

கமலின் பிரிவிற்கு காரணம்:

அவர் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கெல்லாம் ஆடை வடிவமைத்திருக்கிறேன். அந்த படங்களுக்கு கமலஹாசன் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்கவில்லை. அதோடு கமலின் நடவடிக்கையும் மொத்தமாக மாறியது. இதனால் தான் கமலை விட்டு பிரிந்து விட்டேன் என்று கூறி இருந்தார். இப்படி கௌதமி பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர்களுடைய பிரிவிற்கு நடிகை பூஜா குமார் காரணமாக இருக்குமோ? என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *