வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை கோடீஸ்வரர் மனைவியை தேடும் பொலிஸார்!

இந்தோனேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை கோடீஸ்வரர் தனிஷ சுபசிங்கவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவரது மனைவி ரோசா சில்வா மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோரை கைது செய்ய ஜகார்த்தா பொலிஸ் இன்டர்போல் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது.

இருவரும் பிரேசில் நாட்டு பெண்கள் ஆவர். ஜனவரி 20ஆம் திகதி ஜகார்த்தா வந்த அவர்கள், ஜனவரி 31ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினர்.

தனிஷ சுபசிங்கவின் சொத்துக்கள் ஒரு பில்லியன் டொலர்கள் எனவும், அவருக்கு 32 நிறுவனங்கள் சொந்தமாக இருப்பதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அவரது மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிஷ இறந்த அடுக்குமாடி குடியிருப்பின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சில காலங்களுக்கு முன்னர் மரதகஹமுலவில் உரத்தொழிற்சாலையை தனிஷ ஆரம்பித்திருந்ததுடன் அதில் முதலீடு செய்யப்பட்ட தொகை 550 மில்லியன் ரூபாவாகும்.

இதனிடையே தனிஷவின் மனைவி, மகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் பிரேசில் வரவில்லை என பிரேசில் பொலிஸார் ஜகார்த்தா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *