எல்லைமீறிய வாக்குவாதம் கொல்லப்பட்ட கோடீஸ்வரர்

பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் மரணமடைந்த கோடீஸ்வர வர்த்தகர் மொட்டையான ஆயுதத்தால் தலையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் வர்த்தகருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது தொழிலதிபர் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *