அக்கா,தங்கையை திருமணம் செய்து கொண்ட நவரச நாயகன் கார்த்திக்!

தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்த கார்த்திக்கின் திருமணம் விபரம் பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நவரச நாயகன் கார்த்திக்
தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்திக்.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து நினைவெல்லாம் நித்யா, மௌன ராகம், ஆகாய கங்கை, போன்ற பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உச்சம் பெற்றார். பிறகு தமிழ், தெலுங்கு என சில கலக்கலான படங்களை கொடுத்தார்.

மேலும், இவரின் நடிப்பை விட பேச்சுக்கு பெரும் ரசிகர்கள் இருந்துள்ளனர்.

இவர், சில ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்த கார்த்திக், 2015ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் திரைப்படத்தில் மூலம் ரீஎன்ரி கொடுத்தார்.

கார்த்திக்கின் இரு மனைவிகள்
1988ஆம் ஆண்டு சோலைக்குயில் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ராகிணியை திருமணம் செய்துக்கொண்டார். அதில் கார்த்திக்-ராகிணி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தான் கௌதம் கார்த்திக், கையன் கார்த்திக்.

இதன்பின் 1992ஆம் ஆண்டு ராகினியின் தங்கை ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு திரன் கார்த்திக் என்ற மகன் இருக்கிறார்.

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Navarasa Nayagan Karthik Married Two Sisters

இவ்வாறானதொரு நிலையில் தான் கார்த்திக்கின் முதல் மற்றும் இரண்டாவது மனைவியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *