World

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தால் இந்தியாவில் வெடித்த சர்ச்சை!

பிபிசி ஊடகத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் அதே சமயம் இந்தியாவுடனான உறவும் எப்போதும் போல் நீடிக்கும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

பிபிசி ஆவணப்படம்
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்ட பிபிசி ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அதில் 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகவும், பிரதமர் மோடி குறித்தும் பல தவறான கருத்துகள் இடம் பெற்று இருப்பதாக இந்தியாவில் ஒரு தரப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அத்துடன் இந்த ஆவணப் படத்தை வெளியிட ஒன்றிய அரசு தடை விதித்ததில் இருந்து, மற்றொரு தரப்பினர் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தை பொதுவெளியில் திரையிட்டு வருகின்றனர்.

பிபிசி சுதந்திரம் பாதுகாக்கப்படும்
இந்நிலையில் பிபிசி ஆவணப்படம் குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர், அதற்கு பதிலளித்த அவர் பிபிசி ஊடக நிறுவனத்தின் சுதந்திரத்தை பிரித்தானிய அரசு பாதுகாக்கிறது.

அதே சமயம் இந்தியா உடனான உறவில் நாங்கள் அதிக கவனம் கொண்டுள்ளோம், மேலும் வருங்காலங்களில் இந்தியாவுடன் பிரித்தானியாவின் உறவு வலுப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading