முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா?

பொதுவாக முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா கூடாதா என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது.

இந்த நடைமுறை உலகின் பல்வேறு பாகங்களில் வேறுபட்டு காணப்படுகிறது. உதாரணத்திற்கு இங்கிலாந்தில் முட்டைகள் பல்பொருள் அங்காடிகளில் அலமாரியில் வைக்கப்படுகிறது. பெரும்பாலும் பேக்கிங் பொருட்களுக்கு மத்தியில் அவை மறைத்து வைக்கப்படுகின்றன.

ஆனால் அமெரிக்கர்கள் அவற்றை குளிர்சாதன பெட்டிகளில் வைக்கிறார்கள். உலகம் முழுவதும் இவ்வாறாக பல்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன. உண்மையில் முட்டைகளை எங்கு வைக்க வேண்டும்? நிபுணர்கள் கூறும் பதில் என்ன? விரிவாக பார்க்கலாம்.

ஆய்வு ஒன்றின் படி குளிர்சாதனத்தில் வைக்கப்படும் முட்டைகள் ஆரோக்கியமற்றவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பது சிறந்த நடைமுறை என முட்டை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வெப்பநிலை சீராக இருக்கும் எனத் தெரிவித்துள்ள நிபுணர்கள், முட்டைகள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் எனவும் கூறினர். இது குறித்து சில அறிவித்தல்களையும் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி முட்டைகள் 20 பாகை செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலையிலேயே வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண அலமாரிகளில் வைக்கும் போது ஒப்பீட்டு அளவில் நிலையான வெப்பநிலை இருப்பதாக தோன்றினாலும், சமைக்கும்போது வெளியேறும் நீராவி வெப்பநிலையை மாற்றும். இதனால் வெப்ப சமநிலை தன்மை மாற்றமடையும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷேல் செய்யப்பட்ட முட்டைகளை உறைய வைக்க முயற்சிக்காதீர்கள் என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *