தொழில் தொடங்க ஒரு வருட ஊதியத்துடன் கூடிய விடுப்பு விடுத்த நாடு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சொந்த தொழில் தொடங்க 1 வருட ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என அரசாங்க ஊழியர்களுக்கு மகிழச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் ஜனவரி 2ஆம் திகதி முதல் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது.
இது அரசாங்கத்தில் பணிபுரியும் மக்கள், ஜனவரி 2 முதல் தங்களது சொந்த தொழில் தொடங்குவதற்கு ஒருவருட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் அவர்கள் பாதி சம்பளத்துடன் கூடிய ஒரு வருட ஓய்வு விடுமுறையை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாட்டில் மேலும் வணிகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
டுபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் அமைச்சரவையில் இந்த முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது