திலினியால் ஞானசார தேரர் சிக்கலில்!

கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தார்.
பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் முன்னிலையாகியுள்ளார்.
அவரிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த அவர் பிற்பகல் 5.30 அளவில் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தினம் ஊடகங்களில் வெளியான திலினி ப்ரியமாலியின் தொலைப்பேசி உரையாடலில், கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.