ரஷ்ய இராணுவம் சக்தி வாய்ந்தது பின்வாங்கியது அமெரிக்கா!
உக்ரைனியப் போரில் ரஷ்யாவின் இராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவம் மிகப்பெரியது, மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் ஜான் கிர்பி (John Kirby) கூறினார்.
போரில் உக்ரேனியப் படை திருப்பித் தாக்கிப் பல இடங்களை மறுபடி கைப்பற்றிவிட்டதாக வந்த தகவலை ஒட்டி அவர் கருத்துரைத்தார்.
ரஷ்யாவை உக்ரேனில் இருந்து முற்றாக வெளியேற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் உக்ரேன் தன் ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதிக ஆயுதங்கள் கொடுக்குமாறு நட்பு நாடுகளை அது கேட்கிறது.
பின்வாங்கவில்லை என்றும் படையை ஒன்றுதிரட்டும் போர் உத்தி என்றும் இப்போதைய நிலவரம் குறித்து ரஷ்யா கருத்துரைத்தது.
ரஷ்யா தோற்றுவிட்டது என்று நினைத்து அவசரப்பட்டுவிட வேண்டாம் என்று மாஸ்கோ எச்சரித்துள்ளது.