World

விசாவுக்காக 69 வயது முதியவரை மணந்த 27 வயதான இளம்பெண்!

ஆசிய நாடொன்றை சேர்ந்த இளம்பெண் தன்னை விட 42 வயது அதிகமான அமெரிக்காரை திருமணம் செய்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் அதற்கு தம்பதி பதிலடி கொடுத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜேக்கி (27), இளம்பெண்ணான இவருக்கும் டேவ் (69) என்ற முதியவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தம்பதிகளுக்கு இடையே 42 வயது வித்தியாசம் இருப்பதால் அவர்கள் பலரால் விமர்சிக்கப்படுகின்றனர். அடிக்கடி இருவரும் இணைந்து பேசும், நடனமாடும் வீடியோக்களை பதிவிடுவார்கள்.

இதை பார்க்கும் பலரும் ஜேக்கி பணம், கிரீன் கார்டு, விசாவுக்காக தான் டேவை திருமணம் செய்து கொண்டார் என விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால் இதற்கெல்லாம் தம்பதி சளைக்கவில்லை. எங்களுக்குள் வயது வித்தியாசம் அதிகம் தான், ஆனால் அது எந்தவொரு வித்தியாசத்தையும் எங்கள் வாழ்வில் ஏற்படுத்தாது என கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading