FeaturesLocal

பூமியில் தண்ணீர் தோன்றியது எப்படி? ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

ஆறு வருட ஜப்பானிய விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

உயிரின் தோற்றம் மற்றும் உலகம் உருவானது எப்படி என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ரியூகு என்ற சிறுகோளில் இருந்து 2020ல் பூமிக்கு கொண்டு வரப்பட்ட பொருட்களை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

5.4 கிராம் (0.2 அவுன்ஸ்) பாறைகள் மற்றும் தூசிகள் ஹயபுசா-2 எனப்படும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்டன. ஹயபுசா -2 2014 ஆண்டு 300 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியூகு சிறுகோளுக்கு அனுப்பப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவரத்தொடங்கி உள்ளன. ஜூன் மாதத்தில், ஒரு குழு ஆராய்ச்சியாளர்கள் கரிமப் பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினர்.

ஒரு கார்பன் பொருளால் நிறைந்த சி வகை சிறுகோளான ரியூகு, பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனையும், சூரிய குடும்பத்தின் கிகரங்களையும் உருவாக்கிய நெபுலாவிலிருந்து உருவாகியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புதிய ஆய்வறிக்கையில் கூறபட்டு இருப்பதாவது:-

விஞ்ஞானிகள் ரியூகு மாதிரிகள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவ்வாறு தோன்றின என்ற மர்மத்திற்கு விடை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். கரிமம் நிறைந்த சி-வகை சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களுக்கு காரணமாக ஒன்றாக இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பூமியில் ஆவியாகும் பொருட்கள் (கரிமப்பொருட்கள் மற்றும் நீர்) இருப்பது பற்றி இன்னும்விவாதத்தில் உள்ளது. ஆனாலும் ரியுகு சிறுகோள் துகள்களில் காணப்படும் கரிம பொருட்கள், ஆவியாகும் பொருட்களின் (நீர்) ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading