Local

இலங்கை வரலாற்றில் 74 ஆண்டுகளின் பின் அரசியல் சார்ந்த மாற்றங்கள்!

இலங்கையின் வரலாற்றில் 74 ஆண்டுகளுக்கு பின்னர் அரசியல் சார்ந்த மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், எதிர்க்கட்சி தலைவராகிய கட்சித் தலைவராக பொறுப்பில் இருக்கிற ஒரு தலைவரான சஜித் பிரேமதாசவோடு, நாட்டு மக்களின் நலனுக்காக பொது இணக்கப்பட்டுடன் இணைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து வழங்கிய விசேட அறிவிப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அத்துடன் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். நாடாளுமன்றத்தை சுற்றியிருக்கும் ஆற்றிலிருக்கும் நமக்கும், அதற்கு வெளியில் இருக்கும் மக்கள் படும் துன்பம் தெரிகிறது.

திடீர் திருப்பம்! ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகினார் சஜித்
அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாயம்
மக்களும் நாங்களும் சேர்ந்து பயணிக்க வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. கட்சி வேறுபாடு, இன மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒரு கட்சியால் ஒரு கட்சியினுடைய தலைவரால் இந்த நாட்டை மீட்டெடுக்க முடியாத நிலை தான் தற்போது இருக்கிறது.

அந்த யதார்த்த நிலையை உணர்ந்து புதிய இலங்கையை உருவாக்க நாங்கள் இருவரும் இணைந்திருக்கிறோம் என டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச கூறுகையில், இந்த அபிமான பூமியில் இருக்கிற 2.20 கோடி மக்களுடைய தேவைகள், அபிலாசைகள், கோரிக்கைளை நிறைவேற்றும் முகமாகவும் நாங்கள் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.

வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்
இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன்று வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும். சவால்களை ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டும். மக்கள் இன்று அரசமைப்பு மாற்றமொன்றை எதிர்ப்பார்க்கிறார்கள். 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார்கள்.

இதனை நிறைவேற்ற வேண்டும். பெரும்பான்மையான மக்கள் இன்று எம்முடன் இருக்கிறார்கள். இந்தப் பலத்துடன் நாம் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். எமது பயணம் கடினமானதாக இருந்தாலும் இதனை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார். என சஜித் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading