ரணில் ராசியானவர் மஹிந்த பதவி விலக வேண்டும் சமல் ராஜபக்ச தெரிவிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளன.
இந்தநிலையில், 1939 ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பை போன்று குழு முறை அமைக்கப்பட்டு, அமைச்சர்கள் தெரிவுசெய்யப்பட்டால், தேசிய ஐக்கிய அரசாங்க அமைப்பின் ஊடாக செயற்படமுடியும் என்று முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ யோசனை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில், புதிய அரசியலமைப்புக்குள் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், பொருளாதாரம் தொடர்பில், அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பி.பீ. ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டார்.
இதன் காரணமாக 2001 ஆம் ஆண்டு, மறை பொருளாதாரத்தை இலங்கை பெற்றது. 2005 ம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.
இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு இலங்கை, கடன் பொருளாதாரத்தை பெற்றது.
இதன்பின்னர் 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஜெயசுந்தவினால் இலங்கைக்கு திவால் பொருளாதாரம் கிடைத்தது என்று சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இதேவேளை, அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்த சென்றவர்களை ஏன் பொலிஸ் தடுக்கவில்லை என்று ஏன் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டு வருட பதவிக் காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற வேண்டும். இதுவே சிறந்த செயற்பாடாக இருக்கும். இல்லையேல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
இன்று அவர் 50 வருட அரசியல் வாழ்க்கையில் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாமே இல்லாமல் போயுள்ளன. எனவே, அரசியலில் பதவியை ஏற்றுக்கொள்கின்ற அதேநேரம் விட்டுக்கொடுக்கவும் பழகவேண்டும் என்று சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கிடையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மிகவும் ராசியானவர் என்றும் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *