Cinema

அம்மாவாக நடிக்கிறார் அமலா!

ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கணம்’. அம்மா மகன் பாசப்போராட்டம்தான் கதை. இதில் அம்மாவாக அமலாவும், மகனாக சர்வானந்தும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மாவாக நடிக்கும் அமலா கூறியதாவது: டைரக்டர் ஸ்ரீகார்த்திக்குக்கு தனது அம்மாவின் மீதிருக்கும் அன்பின் காரணமாகவே இந்தப் படம் உருவானது.

இந்தப் படம் அந்த அன்பைப் பற்றியது. கண்டிப்பாக உங்களாலும் உணர முடியும் என்று நான் கூறுவேன். அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பெருமையாக உணர்கிறேன். நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய் தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். நான் படத்தை முடிக்கும் வரை, எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன். என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading