பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்?

கொவிட் தொற்றுக்கு எதிராக மூன்றாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கு, பூரண தடுப்பூசி செலுத்துகை இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளதாக வைத்தியர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்து வருகின்றது, எனினும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வமின்றி இருப்பதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக இத்தாலியில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி பெறாவிட்டால் 100 யூரோ அபராதமாக விதிக்கப்படுகிறது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களிடம் அபராதம் அறவிடப்படுமாயின், அதனை எந்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்பது என்பது குறித்து ஆராயப்படும் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *