மகனுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொடுத்த விமானத்தில் பயணித்த பிரபல தொழிலதிபர் பலி!

அயர்லாந்தை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் அவுஸ்திரேலியாவில் விமான விபத்தில் உயிரிழந்த நிலையில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதோடு அவர் தொடர்பில் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

67 வயதான Robert ‘Roy’ Watterson கடந்த சனிக்கிழமை தனது சொந்த விமானத்தில் பயணம் செய்த போது விமானமானது ப்ரிஸ்பேன் அருகே உள்ள கடலில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

அந்த விமானத்தில் 4 பேர் பயணிக்க முடியும் என்ற நிலையில் அவருடன் பயணித்த Chris Mocanu என்பவரும் அவரின் இரண்டு பிள்ளைகளான Lucas (9) மற்றும் Lavinia (10) ஆகியோரும் உயிரிழந்தனர், அதாவது பயணித்த அனைவருமே இறந்துவிட்டனர்.

Robert அயர்லாந்தின் Belfastஐ பூர்வீகமாக கொண்டவர். ஒரு கட்டத்தில் இவர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார். கடந்த 1994ல் தொழில்துறை விநியோக நிறுவனமான Lincom-ஐ தொடங்கி தொழிலில் உச்சம் தொட்டார்.

Robertக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்த விமானத்தில் பயணித்தே Robert உயிரிழந்துள்ளார் என்பது பெருஞ்சோகம்!.

இந்த நிலையில்  Lincom நிறுவனம் சார்பில்  Robertக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அவர் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்தார். Robertன் ஆளுமை மற்றும் தனித்துவமான நட்பு நல்ல வாடிக்கையாளர்களை பெற்று கொடுத்தது.

அவரின் நல்ல மனம் எங்கள் அனைவருக்கும் உத்வேகமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Robert தனது குடும்பத்தாருக்கு எப்போதும் முதலிடம் கொடுப்பவர் என நண்பர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *