சமந்தாவுக்கு போட்டியாக வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமார் தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
பவர் ஸ்டார் உடன் அவர் திருமண கோலத்தில் இருந்த போட்டோ பிக்கப் டிராப் என்ற படத்தின் போட்டோஷூட் என்பது பின்னர் தான் தெரியவந்தது.
இந்தநிலையில் தற்போது வனிதா காத்து என்ற படத்திற்காக ஐட்டம் பாடல் ஆடி இருக்கிறார். ஐட்டம் பாடலுக்கான உடை மட்டும் மேக்கப்பில் அவர் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய ஐட்டம் டான்ஸ் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், வனிதா அவருக்கு போட்டியாக வர முயற்சிக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.