நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் கணவர் மீது மோசடி வழக்கு!
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீதும் 1.5 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது சமீபத்தில் ஆபாச பட வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நிறுவனம் ஒன்று தொடங்கிய ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி அதில் முதலீடு செய்யுமாறு தன்னிடம் 1.51 கோடி கேட்டதாக மும்பை போலீஸில் நிதின் என்பவர் புகார் அளித்துள்ளார். பணத்தை திருப்பி தராமல் நிதின் என்பவரை மிரட்டியதாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களுடைய புகாரின் அடிப்படையில் ஷில்பா மற்றும் அவருடைய கணவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்