கொரோனாவில் இருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு பல்வேறு பக்க விளைவுகள்!

கொரோனா நோயிலிருந்து குணமடைந்த பின்னர் பல்வேறு பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பக்கவிளைவுகளால் பாதிக்கபட்ட 25 குழந்தைகள்  கொழும்பு  லேடி ரிட்ஜ்வே வைத்தியசலையில்  சிகிச்சை பெற்று வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த குழந்தைகள் அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு குணமடைந்த பின்னர் வீட்டிற்கு சென்று பல்வேறு பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தைகளுக்கு மூளை, இதயம் மற்றும் சிறுநீரகத்தின் பல்வேறு கோளாறுகள், அதிகரித்த இதய துடிப்பு, நிமோனியா மற்றும் தொடர்ந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்,

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த குழந்தைகள் ஆறு மாதங்கள் வரை இத்தகைய அறிகுறிகளால் பாதிக்க கூடும் என விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பக்க விளைவுகள் உள்ள சில குழந்தைகளுக்கு antibiotic வழங்க வேண்டும் என்றும் குறித்த antibiotic ஔடதங்களுக்காக அரசாங்கம்  அதிகமாக செலவழிக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *