இந்தியாவில் பிரபல நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு!
கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்நிலையில் ‘தொரட்டி’ படத்தில் நடித்த ஷமன் மித்ரு இன்று (ஜூன் 17) கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 43.
2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘தொரட்டி’. பி.மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஷமன் மித்ருவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷமன் மித்ரு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்