Local

மேல் மாகாணத்திற்குள் 14 பகுதிகளில் வீதி தடைகள்!

மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் 14 பகுதிகளில் நேற்று வீதி தடைகளை ஏற்படுத்தி மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேபோன்று இவர்கள் வந்த 1024 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண எல்லைகளை மீறி பயணித்த 91 பேர் வந்த வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாள காலப்பகுதியல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இதுதொடர்பாக 30,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பகுதியில் ட்ரோன் கெமராக்கள் மூலம் நேற்றைய தினம் (11) நடத்தப்பட்ட கண்காணிப்பின் போது, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading