ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி ஜி – 7 நாடுகள் தீர்மானம்!
G7 நாடுகளின் தலைவர்கள் தங்கள் உச்சிமாநாட்டில் குறைந்தது 100 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உலகெங்கிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு போராடும் நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளனர்.
உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஏற்கனவே 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்தது.
இங்கிலாந்து மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
முதல் 50 லட்சம் டோஸ்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி டோஸ்கள் ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது