Local

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா பெற தகுதியுடையவர்கள்!

தற்போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படுகின்ற 5000 பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம்…!

👉நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தகுதியுடையவர்கள்.

👉சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.

👉சமுர்த்திபெறத் தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காதவர்கள் (Waiting List)

👉முதியோர்கள் (70 வயதினை
உடையவர்கள்)

👉70 வயதினை பூர்த்தியடைந்தும் இதுவரை
முதியோர் கொடுப்பனவிற்கான
முத்திரையினை பெறாதவர்கள்.
( Waiting List )

👉ஊனமுற்றவர்கள் ( Disables )

👉ஊனமுற்றவராயினும் இதுவரை
கொடுப்பனவினை பெறாதவர்கள்.
( Waiting List )

👉PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு
விண்ணப்பித்து கிடைக்காதவர்களும்
( Waiting List )

👉பாரிய நோய்த்தாக்கத்திற்கு
உள்ளானோர்கள்.
eg. Kidney

Note: ஒரு நபர் சமுர்த்தி பெறுகின்றவர்அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர் அத்துடன் அந் நபர் முதியோர் கொடுப்பனவினை பெறுகின்றவராயினும் அல்லது பெற தகுதியுடையவராயினும் அவர் 2 கொடுப்பனவினையும் பெறுவதற்கு தகுதி உடையவராவார்.

5000 + 5000 = 10,000/=

இதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எனவே, இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை சந்தித்து இக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளுங்கள்.

நிவாரண நிதி கிடைக்காதவர்கள் அழையுங்கள் 011 4354550

[02.06.2021 ஆரம்பம்]

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading