இம்முறை கொரோனாவின் வேகம் அதிகரிப்பு!

முதலாவது´ மற்றும் ´இரண்டாவது´ கொரோனா பரவல் அலையை விட இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

சுகாதாரத் திணைக்களத்தின் தலைமை தொற்று நோயியல் பிரிவின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்படும் கொவிட்-19 தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய நபர்களுடன் முதலாவது தொடர்புகளைப் பேணியவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனை ஒரு சாதாரணமாக விடயமாகக் கருத முடியாது. எனினும் முதலாவது கொரோனா தொற்று அலையின் போது அதற்கு முகங்கொடுக்கும் வகையில் வைத்தியசாலைகளை தயார்படுத்தினோம்.

அதேபோல் தேவையான அளவிற்கு தற்போதும் அவற்றை ஒழுங்குபடுத்தினோம். தற்போது எம்மிடம் போதியளவு வசதிகள் உள்ளன எனவும் சுகாதாரத் திணைக்களத்தின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறினார்..

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *