Features

இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஆல்பக்கோட பழம்!

ஆல்பக்கோடா பழத்தை வாயில் போட்டால் எப்பேற்பட்ட வாந்தி உணர்வும் தலை தூக்காது என்று சொல்வார்கள் வீட்டு பெரியவர்கள். இதன் பெயர் ஆல்புக்காரா என்பதாகும். இவை பழக்கடைகளில் கிடைக்காது. நாட்டுமருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். உண்மையிலேயே இவை காய்ச்சல் வந்தவர்களின் பிணியை தீர்க்கும் அருமருந்து என்று சொல்லலாம்.

காய்ச்சல், எந்த காய்ச்சல் வந்தாலும் அவை குணமான பிறகும் தொடர்ந்து அதன் பாதிப்பை காண்பிக்கவே தொடங்கும். குறிப்பாக காய்ச்சலினால் நாக்கும், வாயும் நன்றாகவே இல்லை, வாய்க்கு என்ன சாப்பிட்டாலும் கசக்கவே செய்கிறது என்று காய்ச்சல் பாதிப்புள்ள அனைவருமே சொல்வதுண்டு.

காய்ச்சல் வந்தாலே உணவு மூலமும் கைவைத்தியம் மூலமும் சரிசெய்த நம் முன்னோர்கள் இந்த காய்ச்சலினால் உண்டாகும் பாதிப்பையும் அதை கொண்டே சரிசெய்தார்கள். அப்படி அவர்கள் வாய்க்கு சுவையை உணரவைக்க எடுத்துகொண்ட பழம் தான் ஆல்பக்கோடா பழம்.

சுவையில்லாத நாக்குக்கு வெறும் சுவையை மட்டுமே கொடுக்ககூடிய பழமாக இதை எடுத்து கொள்ளமுடியாது. கருநிறமாக இருக்கும் இவை இலந்தப்பழம் போன்ற புளிப்பு சுவையைக் கொண்டது. இவை ப்ளம்ஸ் வகையை சேர்ந்தது. இந்த பழத்தில் வைட்டமின் பி. ஏ சத்துகளும், சுண்ணாம்பு மற்றும் உயிர்ச்சத்துகளும் கொண்டிருக்கின்றன.

இதை சாப்பிட்டால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். இரும்புசத்தும் கொண்டிருப்பதால் இவை ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலை பலவீனத்திலிருந்து காப்பாற்றி பலமாக வைத்திருக்கும். உடலுக்கு தெம்பு தரக்கூடியது என்பதால் இதை காய்சல் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் நோயிலிருந்து விரைவாக முழுமை பெறும். இது குறித்து தெரிந்துகொள்வோம்.

காய்ச்சலின் போது உடலில் போதுமான அளவு சத்துஇல்லாததால் உடல் பலவீனமாக இருக்கும். காய்ச்சலின் போது இதை வாயில் இட்டு கொண்டால் அவை உமிழ்நீரோடு கலந்து உடலுக்கு வேண்டிய எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். காய்ச்சலினால் உடல் பலவீனமாக இருந்தாலும் அதை உணராத அளவுக்கு உடல் தெம்பாக இருக்கும்.

காய்ச்சலின் போதும் காய்ச்சல் நீங்கிய பிறகும் கூட சிலருக்கு வாந்தி, குமட்டல் உணர்வு இருக்கும். இதை போக்க புளிப்பு, இனிப்பு, கசப்பு என்று இருக்கும் அத்தனை சுவையையும் சாப்பிட்டு பார்ப்பார்கள். ஆனாலும் வாயில் கசப்பு உணர்வு சற்றும் குறையாது. இவர்களுக்கு ஏற்ற பழம் இது. ஆல்பக்கோடா பழத்தை வாயில் போட்டு சுவைத்தால் சிறிது சிறிதாக வாந்தி உணர்வு குறையும். நாக்கில் சுவைமொட்டுகள் சுவையை பொறுமையாக உணரும்.

காய்ச்சலுக்கு பிறகு உடலில் நீர்ச்சத்து குறைவதுண்டு. காய்ச்சலினால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் தொண்டையில் வறட்சி உண்டாகும். தொண்டை வறட்சியை தடுத்து உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க இந்த ஆல்பக்கோடா உதவும். தொண்டை வறட்சி சட்டென்று குறைய இந்த ஆல்பக்கோடா பழம் உதவும்.

காய்ச்சலின் போதும் அவை நீங்கிய பிறகும் கூட அதன் விளைவால் மலச்சிக்கல் பிரச்சனை தொடங்கும். இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கும் ஆல்பக்கோடா பழம் தீர்வாக இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த ஆல்பக்கோடா பழம் மலச்சிக்கலையும் தீர்க்கும். வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் வல்லமை கொண்டது.

ஆல்பக்கோடா பழம் இவ்வளவு நன்மை தருகிறதா என்று கேட்பவர்கள் இதையும் தெரிந்துகொள்ளுங்கள். இவை வெறும் காய்ச்சல் காலங்களில் மட்டுமே சாப்பிடக்கூடியவை அல்ல, இதை எப்போதுமே சாப்பிடலாம். எல்லா வயதினருமே சாப்பிடலாம். குறிப்பாக கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணிகள் குமட்டலை போக்கி கொள்ள இதைதான் சாப்பிட்டார்கள். தற்போதும் வீட்டு பெரியவர்கள் கர்ப்பிணிகளுக்கு இதை பரிந்துரைக்கிறார்கள்.

கர்ப்பிணிகள் குமட்டலை கட்டுப்படுத்த ஆல்பக்கோடா பழத்துடன் சிறிது இஞ்சி தேன் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் குமட்டல் உணர்வு கட்டுப்படும். மருத்துவ குணங்கள் நிறைந்த ஆல்பக்கோடா பழம் உடலில் இருக்கும் கொழுப்பையும் நீக்கும் வல்லமை கொண்டது. உடல் எடை குறைபவர்கள் ஆல்பக்கோடா பழத்துடன் கொள்ளு சேர்த்து எடுத்துகொண்டால் நினைத்தபடி உடல் எடை குறையும். இவை உடலில் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பை கரைத்து வெளியேற்றும். இவ்வளவு அற்புத குணங்கள் கொண்ட ஆல்பக்கோடாவை இனி நீங்களும் பயன்படுத்துங்கள். சற்றே புளிப்புசுவை கொண்டிருக்கும் பழம் நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும்.

இந்த ரஷ்யாவில் இருந்து பரவியதாக செய்தி…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading