உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.08 லட்சத்தை தாண்டியது.  சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது  209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா,  இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,08,856 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும்  கொரோனாவால் 1,46,40,349 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,734,789 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,815 பேர்  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,118,107 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,503 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 700,399 பேர்  குணமடைந்தனர்.
  • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 143,289 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,898,550 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 79,533 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,099,896 ஆக அதிகரித்துள்ளது.
  • ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,342 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 771,546 ஆக அதிகரித்துள்ளது.
  • பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,187 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 353,590 ஆக உயர்ந்துள்ளது.
  • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,420 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 307,335 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 45,300 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 294,792 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,188 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 273,788 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,045 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244,434 ஆக உயர்ந்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,163 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202,845 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174,674 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,143 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,521 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,800 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,706 ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,136 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,725 ஆக அதிகரித்துள்ளது.
  • குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 408 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,204 ஆக அதிகரித்துள்ளது.
  • சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,912 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 985 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,642 ஆக அதிகரித்துள்ளது.
  • மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,779 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி மற்றும் பாதிப்பு  எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *