பாலியல் உறவின் போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது!

கொரோனா பாதிப்பு காரணமாக பாலியல் உறவின் போது முககவசம் அணிவது பாதுகாப்பானது என நியூயார்க் நகர சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள் மூலம் அறிவுறுத்தி உள்ளது.பாலியல் மூலம் கொரோனா பரவுவது குறித்து இன்றும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. எனினும் கொரோனாவில் இருந்து ஆண்கள் மீண்ட பிறகும், மலம் மற்றும் ஆண்கள் விந்தணுக்களில் கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது வைரஸ் பாலியல் ரீதியாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆய்வு போதுமானதாக தெரியவில்லை, சில விஞ்ஞானிகள் இது சாத்தியமில்லை என்று நினைக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள உதவும் வகையில், நியூயார்க் நகர சுகாதாரத் துறை அதன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
கொரோனா உமிழ்நீர் மற்றும் சுவாசத்தின் மூலம் பரவக்கூடும் என்பதால், உடலுறவில் ஈடுபடும்போது மக்கள் முகம் மறைப்பு அல்லது முககவசம் அணியலாம் என்று நியூயார்க் நகர சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது. மேலும் பாலியல் நிலைகள் மற்றும் சுவர்கள் போன்ற உடல் தடைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்கப்பூர்வமாக இருங்கள், அதே நேரத்தில் நேருக்கு நேர் தொடர்பைத் தடுங்கள். மக்கள் ஒன்றாக சுயஇன்பம் மூலம்  உடல் ரீதியாக தொலைவில் இருக்க முடியும் என வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *