முன்னாள் அமைச்சர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்

விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, நீர்கொழும்பு பல்லன்சேனவிலுள்ள இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே 27 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து இவ்வாறு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக விளக்கமறியல் செய்யப்படும் அனைத்து சந்தேகநபர்களும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கைக்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் (நிர்வாம்) பந்துல ஜயசிங்க, தெரிவித்தார்.
புதிதாக சிறைவரும் கைதிகள் கொவிட்-19 நோய் அச்சுறுத்தல் காரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 14 நாட்கள் பூசா, நீர்கொழும்பு – பல்லன்சேன, போகம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் குறித்த விளக்கமறியல் கைதிகள், உரிய சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.