கொலை குற்றச்சாட்டில் 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் வைத்தியராகி சாதனை!

கர்நாடக மாநிலம் கலாபுராகியைச் சேர்ந்த இளைஞர் சுபாஷ் கொலைக் குற்றத்துக்காக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து எம்பிபிஎஸ் முடித்து மருத்துவராகியுள்ளார்.அஃப்சல்புர் தாலுகா, போசாகா கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் துகாராம் பட்டீல், வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் சாதிக்கவும், புதிய வாழக்கையைத் தொடங்கவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
பெங்களூருவில் 1997ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார் சுபாஷ். படிக்கும் போது, அவர் இருந்த பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அஷோக்கின் மனைவி பத்மாவதிக்கும் சுபாஷுக்கும் தவறான உறவு ஏற்பட்டது. இதில், அஷோக்கை சுட்டுக் கொன்றுவிட்டு, சுபாஷ் சிறைக்குச் சென்றார். இந்த குற்றத்துக்கு 2002ம் ஆண்டு சுபாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பரப்பன அக்ரஹாரா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தார். தற்போதைய செய்திகள் : கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சதனைஇந்திய பயணத்தை எதிர்நோக்கியுள்ளேன்: டிரம்ப் தன்னை அடையாளம் தெரியாத காவலரை சஸ்பெண்ட் செய்யச் சொன்ன அமைச்சர்டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிப்புமெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்கு புதிய சலுகை அறிவிப்புபிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்! சிறையில் இருந்தபோது, சிறைத் துறை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்த சுபாஷ், சிறையில் இருக்கும் கைதிகளில் காசநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை நோயில் இருந்து மீட்க உதவியதற்காக சிறை நிர்வாகம் இவரை கௌரவித்தது.ஆயுள் தண்டனை முடித்துவிட்டு, 2016ம் ஆண்டு வெளியே வந்த சுபாஷ், ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து எம்பிபிஎஸ் படிக்க அனுமதி பெற்று 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்பிபிஎஸ் படித்து முடித்தார். அதன்பிறகு, ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் பயிற்சியை முடித்துவிட்டு இன்று அதற்கான சான்றிதழ் பெற காத்திருக்கிறார்.சிறையில் இருந்த போதே, சுபாஷ் எம்ஏ ஜர்னலிசமும் படித்து முடிந்தார். இது பற்றி அவர் கூறுகையில், சிறை வாழ்க்கை,எனக்கு வாழ்க்கைப் பற்றிய பல புரிதல்களை ஏற்படுத்தியது. சிறையில் இருக்கும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளுதல், புத்தகங்கள் படிப்பதையே பெரும்பாலும் செய்து கொண்டிருந்ததாகவும், கிளினிக் ஒன்றைத் தொடங்கி, சிறையில் இருப்பவர்களின் உறவினர்களுக்கும், ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் இலவச சிகிச்சை அளிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.இவருடன், கொலைக்கு உடந்தையாக இருந்த பத்மாவதியும் ஆயுள் தண்டனை பெற்று, 2016ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, நன்னடத்தைக் காரணமாக விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *