வட்டிக்கு பணம் கொடுத்து நஷ்டம் ஆகிட்டாராம் நடிகர் ரஜினிகாந்த்!!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005 வரையிலான நிதியாண்டில் வருமானவரி கணக்கு தாக்கல் குறித்து சந்தேகம் எழுப்பி வருமான வரித்துறை குற்றம்சாட்டியிருந்தது. இதற்காக அவருக்கு வருமான வரித்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் ரஜினி இந்த அபராதம் எதையும் செலுத்தவில்லை. இதனால் வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ரஜினிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.1 கோடிக்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை வாபஸ் பெற்றது.

இந்த நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த ஆவணத்தின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆவணத்தில், நான் சம்பாதித்த பணத்துக்கு வரி கட்டிவிட்டேன். நான் எனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பணத்தை கடனாக வழங்கினேன். இது எப்படி வட்டி தொழில் ஆகும். நான் இதை வியாபாரமாக செய்யவில்லை. வட்டிக்கு பணம் தருவது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். நான் அப்படி எந்த தொழிலும் செய்யவில்லை. வட்டி தொழிலாக செய்தால் அரசிடம் நான் முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால், நான் இதை தொழிலாக செய்யாத காரணத்தால் வருமானவரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது. கடந்த 2002-03-ம் நிதியாண்டில் ரூ.2.63 கோடி கடன் வழங்கினேன். இதற்கு ரூ. 1.45 லட்சம் வட்டி வந்தது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் நிகர லாபம் பெறப்பட்டது. அதற்கு நான் முறையாக வட்டி கட்டி விட்டேன்.

அதேபோல் பல்வேறு காலங்களில் நான் பலருக்கும் கடன் கொடுத்தேன். 2003-2004 கால கட்டத்தில் கோபாலகிருஷ்ணன் ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ரூ.1 கோடியே 95 லட்சம், பைனான்சியர் அர்ஜூனன் லாலுக்கு ரூ.60 லட்சம், சசிபோஷனுக்கு ரூ.5 லட்சம், சோன் பிரதாப்புக்கு ரூ.3 லட்சம், முரளி பிரசாத்துக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு பலர் கடனை திரும்ப தரவில்லை. எனவே தான் 2004-2005ல் தான் கொடுத்த கடனில் ரூ.1 கோடியே 73 லட்சம் வராக்கடனாகி விட்டதாகவும், அந்த கடனை தள்ளுபடி செய்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் எனக்கு ரூ.33 லட்சம் வரை இழப்பு தான் ஏற்பட்டது.

இதை நான் தொழிலாக செய்யவில்லை. நண்பர்களுக்கு உதவியாக தான் செய்தேன். அதனால் இதற்கு வரி கட்ட தேவையில்லை. வருமானத்தில் வட்டி மூலம் கிடைத்த பணத்தை வட்டி தொழிலாக கிடைத்த பணமாக கருதாமல் வேறு வகையான வருமானம் என்ற அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்கில் எடுத்து கொண்டுள்ளனர். மேலும், 2002-2003, 2004-2005 நிதியாண்டில் தான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தனக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபம்,  கோடம்பாக்கத்தில் உள்ள அருணாச்சலா கெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றின் மூலம் வருமானம் கிடைத்துள்ளது. தனது லோட்டஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் 2002ல் தயாரித்த பாபா படத்தில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *