பிரதமர் பணியாட் தொகுதி தலைமை அதிகாரியாக அதிர்தநாயகம்!

பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் பணியாட் தொகுதி பிரதித் தலைமை அலுவலராக பிரதீப் அமிர்தநாயகம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அமிர்தநாயகம்,   ஐக்கிய இராஜ்ஜியத்தின் வரையறுக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (FCIM) உயர் புலமைப்பரிசிலினை பெற்றவராவார்.

மேலும், வெகுசன ஊடகம், விளம்பரப்படுத்தல் மற்றும் நிர்வாகத் துறையில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டுள்ள அமிர்தநாயகம், தேசிய தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, தேசிய வானொலி ஆகிய நிறுவனங்களில் செய்தி அறிவிப்பாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹோம்ஸ் பொலாட் வர்த்தக விளம்பர நிறுவனத்தின் ஸ்தாபகரான அமிர்தநாயகம் , 2015 ஆம் ஆண்டு முதல் பீபல்ஸ் லீசிங் மற்றும் பினான்ஸ் கம்பனியின் பிரதித் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

அனுர பண்டாநாயக்க மன்றத்தின் பணிப்பாளராகவும்; செயற்படும் அமிர்தநாயகம் , கொழும்பு மேற்கு ரொட்டரி கழகத்தின் 50 ஆவது தலைவராகவும் காணப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *