Local

சென்னை தனியார் பல்கலைகளில் நைற்றா பயிலுநருக்கு மேலதிக கல்வி வாய்ப்பு! – நஸீர் நடவடிக்கை

தமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சென்னை ஆவடி வேல்டெக் தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய பயிற்சி, கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்(நைற்றா) மூலமாகப் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு பல்வேறு துறைசார் மேலதிக கல்வி மற்றும் பயிற்சிகளை நடத்துவதற்கான பேச்சுகளை நைற்றாவின் தலைவர் நஸீர் அஹமட் கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தார்.

சென்னை தாஜ்ஹோட்டலில், ஆவடி வேல்டெக் தனியார் பல்கலைக் கழக த்தின் வெளிநாட்டு உறவுகளுக்கான பணிப்பாளர் டாக்டர். எஸ்.சிவபெருமாள் மற்றும் மாணவர் சேர்ப்புக்கான தலைவி எஸ்.நூர்ஜகான் ஆகியோருடன் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, வெல்டெக்ஸ் மூலமாக நடப்படும் பயிற்சிகள் குறித்து ஆராயப்பட்டதுடன் குறிப்பாக B. Tech Programmes, School of electrical and communi cation, School of Computing, School of Mechanical and Construction, School of Media and Communication, School of Management போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை மாணவர்கள் பயிற்சி மற்றும் புலமைப் பரிசில்களைப் பெறுதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கூடிய விரைவில் இது குறித்த மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கும் நைற்றா தலைவர் நஸீர் அஹமட், “இதுபோன்று ஆஸ்திரேலியா, கனடா, ஜேர்மன், பிரிட்டன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், மலேசியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களிலும் நைற்றாவில் பயிலும் மாணவர்கள் மேலதிக பயிற்சிகளையும் கல்விகளையும் பெறுவதற்கான முழுப் பேச்சுகள் அந்தந்த நாட்டுக்குப் பெறுப்பான தூதரகங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்படும். இவை யாவும் இவ்வருடத்துக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading