மாகந்துரே மதுஷின் வீட்டில் கோடி கணக்கில் பணம் மீட்பு!

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷ் மற்றும் டீ. மஞ்சுவின் உதவியாளர்கள் மூவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வத்தளையில் இன்று (07) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த ஐஸ் உள்ளிட்ட 20 போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

26, 29, 32 வயதுடைய மூவரே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை விசாரணைகளின் பொருட்டு ​போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மாக்கந்துர மதுஷ் கைது: இன்றைய அப்டேட்!

  • மாக்கந்துர மதுஷின் டுபாய் வீட்டில் இருந்து 5 கோடி ரூபா ரொக்கப்பணம் மீட்பு
  • அவருக்கு சொந்தமான 4 வீடுகள் முற்றுகையிடப்பட்டன.
  • பிரபல பாடகர் அமல் பெரேராவின் மஹரகம வீட்டில் விசேட அதிரடிப்படை அதிரடி தேடுதல். அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை.
  • அங்கு கொக்கெய்ன் போதைப்பொருள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு.
  • கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயனுக்கு சொந்தமான தெஹிவளை வீட்டில் டிஜிட்டல் தராசுடன் சில பொருட்கள் மீட்பு.
  • அமல் மற்றும் ரயனின் தம்பிமார் கைது.

இந்த விவகாரத்தை நேரடியாகவே கையாண்டுவரும் ஜனாதிபதி மைத்திரி, கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க அங்கீகாரம் வழங்கியவர்களைக் கண்டறியுமாறு உத்தரவிட்டார்.

நேற்றும் இன்றும் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார செயலர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோருடன் ஜனாதிபதி விசேட பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *