23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தான தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் மகன்
பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் 23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்கவுள்ளார்.
@GM491 என்ற டுவிட்டர் பக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவர் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், என் தாய்க்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து ஆனது, வரும் வெள்ளிக்கிழமை அவருக்கு மறுமணம் நடக்கவுள்ளது.

தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் இளைஞரின் பதிவுக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடவுள் ஆசியில் இளைஞரும், அவரது தாயும் நன்றாக இருக்க வேண்டும் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.