ஆளுநர் பதவி மைத்திரி எனக்கு வழங்கிய பரிசு! – அஸாத் ஸாலி கூறுகின்றார்

“மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த பின்னர் அவருடன் தொடர்ந்தும் பணியாற்றியமைக்கான பரிசாக ஜனாதிபதி, மேல் மாகாண ஆளுநர் பதவியை எனக்கு வழங்கியுள்ளார்.”

– இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எனது அரசியல் வாழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி என்னை இரண்டு முறை ஏமாற்றியது. இந்த ஆளுநர் பதவியின் மூலம் மேல் மாகாணத்தில் மாற்றத்தைச் செய்து காட்டுவேன்.

5 மாகாணங்களுக்கு புதிய ஆளுநரை நியமித்த ஜனாதிபதி அடுத்த சில தினங்களில் ஏனைய 4 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்கவுள்ளார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *