கள்ளக் கூத்துக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி!

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேகூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக் கட்டிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய அப்பெண் தனது 9 வயது மகனால் வசமாகசிக்கியுள்ளார்.

விவசாயி ராஜலிங்கத்திற்கு சோனியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ராஜலிங்கம் விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவுராஜலிங்கம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி அழுது புலம்பி ஊரையேகூட்டியுள்ளார். பின்பு தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தற்கொலை என்று வழக்கு பதிவுசெய்த பொலிசார் சோனியாவிடம் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், ராஜலிங்கத்தின் 9 வயது மகனால் கொலைவழக்காகமாறியுள்ளது.

குறித்த 9 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட பொலிசார், தந்தையை ஐந்து பேர் சேர்ந்து மயக்கஊசி போட்டுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுச் சென்றதாகவும், இதற்குத் தனது தாயும் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பின்பு சோனியாவிடம்விசாரிக்கையில், அவர்திருவண்ணாமலையில் இருந்து கூலிப்படைகளை வரவழைத்து கணவரை கொலை செய்ததைஒப்புக்கொண்டுள்ளார்.பல்வேறு ஆண்களுடன்சோனியாவிற்கு ஏற்பட்ட பழக்கம் கணவருக்கு பிடிக்காமல் கண்டித்ததால் இவ்வாறானசம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கொலை செய்யும் பொழுது யாருக்கும் சந்தேகம் வராமல் வீட்டின் ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்துவிட்டு, துணியால் மறைத்து இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *