Local

மைத்திரியின் ஆட்டமும் ஓயவில்லை – 1735 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த 2019 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜட் அரசியல் குழப்பங்களினால்,  இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில்,   நிதியமைச்சரான மகிந்த ராஜபக்ச, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன்படி, வரும் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதிக்காக, 1735  பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

2019ஆம் ஆண்டில் முதல் 4 மாதங்களுக்கு தேவையான நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading