மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மிக எளிதில் புகழின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியினை கோடிக்கணக்கான ரசிகர்கள் தவறாமல் பார்ப்பது தான் காரணம்.
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழ்பெற்ற ராகுல் மகாஜன் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளார். 43 வயதாகும் அவர் 25 வயதே ஆகும் Natalya Ilina என்ற மாடலை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
Kazakhstan நாட்டை சேர்ந்த Natalya Ilinaவை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளார் அவர். “என் முதல் இரண்டு திருமணங்களும் அவசரத்தில் நடந்ததால் அது விவகாரத்தில் முடிந்தது, ஆனால் இப்போது எங்களுக்குள் அதிக ஒற்றுமை இருக்கிறது. எனக்காக Natalya இந்து மதத்திற்கு மாறியுள்ளார்” என ராகுல் மகாஜன் கூறியுள்ளார்.
ராகுல் மகாஜன் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.