Local

சபையில் குழப்பம் – மஹிந்த அணி வெளிநடப்பு

தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைத்திரி, மஹிந்த கூட்டணி இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 கூடியது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில்,  தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, மகிந்த சமரசிங்க, எஸ்.பி.திசநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, ஆகிய 5 பேரும்,

ஐதேக சார்பில், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல ஆகிய ஐந்து பேரும்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா மற்றும்  ஜேவிபி சார்பில் விஜித ஹேரத்தும், தெரிவுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்தே குழப்பம் ஏற்பட்டது. இதற்கு தினேஸ் குணவர்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அதன்பின்னர் மஹிந்த அணி வெளிநடப்பு செய்தது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading