இலங்கையின் முதலாவது உலகச் சந்தை -உள்நாட்டு நவீன சில்லறை அரங்கில் நுழையும் Softlogic GLOMARK

soft logic Holdings PLC அனது Softlogic GLOMARK இன் அறிமுகத்தினை அறிவித்தது. இது இலங்கையின் நவீன சில்லறை வர்த்தகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் இலங்கையின் முதலாவது உலகச் சந்தை என்பதுடன் தனிப்பட்ட துல்லியமான உலகளாவிய அனுபவத்தையும் இது வழங்கவுள்ளது.

கொழும்பின் வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதியான தெல்கந்தவில் Softlogic GLOMARK சகல வசதிகளுடன் அமைந்துள்ளது. அதிசிறந்த நுகர்வோர் அனுபவத்தினை வழங்கிட மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் பரவலான தேர்வுகளைக் கொண்ட பொருட்களையும் இது கொண்டுள்ளது.

அத்துடன் முதலாவது தொடர்த் தெரிவுகளை வழங்கவுள்ள Softlogic  இன் இந்நவீன வர்த்தக முயற்சியானது உலகெங்கிலும் இருந்து பெறப்பட்ட பரவலான தேர்வுகளை புதிய மற்றும் உயர் தரத்திலான, வேறெங்கும் கிடைக்காத அனுபவத்துடன் வழங்கவுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கரி, இறைச்சித் தொழில், சீஸ் உற்பத்தி மற்றும் வாழ்க்கையின் சகல தேவைகளுக்கும் Softlogic GLOMARK  இன் நிபுணத்ததுவத்தினைப் பெற்றிடலாம். ஒவ்வnhரு பிரிவிலும் சிறந்த இணைவுப் பொருட்கள் மூலம் சிறந்த விளைவினைப் பெற்றிட அதனைப் பற்றி நன்கறிந்த நிபுணர் ஒருவர் உங்களுக்கு உதவுவதற்கு காத்திருப்பார்.

உலகெங்கிலும் இருந்து வந்துள்ள சீஸ் வகைகள் முதல் சரியாக வெட்டப்பட்ட இறைச்சித் துண்டு வரை உங்களுக்கு தேவையானதை சரியாக தெரிவு செய்து கொள்வதற்கு இந்நிபுணர்கள் உங்களுக்கு உதவுவர். இன்று வரை பல வாடிக்கையாளர்களுக்கு இலங்கையில் கிடைக்காத சில சிறப்புப் பொருட்களுக்கு பதிலீடாக இருக்கும் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையே காணப்படுகிறது.

ஆனால் இனி உலக சுப்பர் மார்க்கட்களில் இருக்கும் கவர்ச்சிகரமான மற்றும் எளிதில் கிடைக்கப் பெறாத மளிகைப் பொருட்களை GLOMARK  இன் மூலம் இனி இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். GLOMARK  இல் ஷொப்பிங் செய்வதென்பது ஓர் எல்லையற்ற அனுபவத்தினை வழங்கிடும். நவீன சில்லறை விற்பனையில் வாடிக்கையாளருக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக்கூடியதுடன் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவ வழிகாட்டியுடன் ஒவ்வொரு பொருளையும் வாடிக்கையாளருக்கு இங்கே பெற்றுக் கொள்ள முடியும்.

Softlogic Holdings PLC இன் கீழ் இயங்கும் Softlogic Retail PLC இன்  துணை நிறுவனமான Supermarkets Pvt Ltd இனால் GLOMARK  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் சார் வணிகமாக 100க்கும் மேற்பட்ட சர்வதேச வர்த்தக நாமங்களை சந்தைப்படுத்தும் நாட்டின் மிகவும் வலுவானதோர் விநியோகத்தினை இது கொண்டுள்ளது.

Softlogic GLOMARK, இன் திறப்பு விழாவின் போது Softlogic Holdings PLC இன் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. அஷோக் பதிரகே கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை மக்களுக்கு Softlogic GLOMARK இன் உலகளாவிய அனுபவத்தினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். GLOMARK நுகர்வோருக்கு நவீன வணிகத்தில் ஒரு புதிய தரத்தை அறிமுகப்படுத்துவதுடன் சுப்பர் மார்க்கட் அனுபவத்தினை உண்மையில் பெற்றிடவும் ஒரே கூரையின் கீழ் சகல தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்ளவும் வழிவகுக்கிறது.

எங்கள் தேர்வுகள், கொள்வனவாளர்களின் வசதியை மேலும் அதிகரித்திட அனைத்து தினசரி மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களை உள்ளடக்கியுள்ளது. இன்றைய காலத்து நுகர்வோரின் தொழில்நுட்ப ரீதியான கருவிகள் மற்றும் இலகுவான ஷொப்பிங் அனுபவத்தின் தேவையை நாம் நன்கு புரிந்து வைத்துள்ளோம். அதனால் புடுழுஆயுசுமு அனுபவம் இவையனைத்தையும் உங்களுக்கு வழங்கிடும்.

Softlogic Holdings PLC ஆனது ஏற்கனவே நுகர்வோர் எலக்ட்ரோனிக்ஸ் மற்றும் ஆடைகள் பிரிவு, புத்தாக்கம் மிக்க உணவகம் மற்றும் உணவுத் தொழிற்துறை போன்றவற்றில் உலகளாவிய வர்த்தக நாமங்களுடன் கூட்டிணைந்து சில்லறை விற்பனைத் துறையில் முன்னணி தலைமைத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன் வலுவான ஆற்றல் கொண்ட இப்பிரிவில்; கால்தடம் பதிக்க தற்போது நவீன வர்த்தகத்தில் விரிவுபடுத்தல்களை மேற்கொள்கிறது.

அதிகரித்த வருமானம்;, வளரும் நகரமயமாக்கல் மற்றும் மாறுபடும் வாழ்க்கைத் தரம் போன்றவை பாரம்பரிய சில்லறை விற்பனை முறைகளிலிருந்து அதிகமான வாடிக்iயாளர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இதன் மூலம் இலங்கையின் நவீன மளிகை சில்லறை விற்பனை பிரிவு மிக அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. எவ்வாறாயினும் நவீன சில்லறை விற்பனையில் 15மூ-18மூ வேகமான பாவனையைக் கொண்ட நுகர்வோர் பொருட்கள் விற்பனையானது Fitch (2017)இன் படி பிராந்திய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகவே உள்ளது.

Softlogic Holdings PLC  ஆனது இலங்கையின் பல்வகைப்பட்ட வர்த்தகங்களைக் கொண்டுள்ள மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களுள் ஒன்றாகும். சில்லறை வியாபாரம், சுகாதாரம், நிதிச் சேவைகள், பொழுதுபோக்கு மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய வளர்ந்து வரும் பொருளாதாரத் துறைகளில் முன்னணி சந்தை நிலையை இது வகிக்கிறது. தற்போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் அமைந்;துள்ள காரியாலயங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிவதுடன் உலகளாவிய ரீதியிலான வர்த்தக நாமங்களுக்கு அங்கிகரிக்கப்பட்ட விநியோகத்தராகவும் விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *