கட்டமைப்புக்குள் மரங்களை வளர்க்கும் புதுமை குடியிருப்பு

பல்வேறு உலக நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதுடன் காற்று மாசுபடுவதை தடுக்க நிறைய முயற்சிகளையும் கடைப்பிடித்து வருகின்றன.

யற்கை வளத்தை வீணாக்காமல், பாரம்பரியமான கட்டுமான வடிவமைப்பு முறையில் வீடுகள் உள்ளிட்ட அடுக்கு மாடிகளை நவீன தலைமுறையை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர்கள் பசுமை கட்டிடமாக உருவாக்குகிறார்கள்.
மேற்கண்ட பசுமை கட்டுமான அடிப்படையில் இத்தாலி மிலன் நகரில் அமைந்துள்ள ‘பாஸ்கோ வெர்டிகலே’ என்ற இரட்டை மாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே கிட்டத்தட்ட 20 ஆயிரம் மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
காற்று மாசு தவிர்ப்பு
அந்த இரட்டை கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 2009-ல் தொடங்கி 2014-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. 100 வீடுகள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுற்றுப்புறத்தில் உள்ள மாசுபட்ட காற்றை சுத்தப்படுத்தும் விதமாக அதன் வடிவமைப்பாளர்கள் செயற்கையான ஒரு காட்டை திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர்.
ஒலி மாசு தவிர்ப்பு
அந்த இரண்டு கட்டிடங்களுக்குள் கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட மர வகைகளும், 4500 வகையான புதர் செடிகளும், 15 ஆயிரம் வகை சாதாரண செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, வீடுகளுக்குள் குளிர்ச்சி ஏற்படுவதுடன், காற்றில் உள்ள சிறிய அளவிலான தூசிகளை வடிகட்டும் தன்மை பெற்றவையாகவும் அவை செயல்படுகின்றன.
மேலும், தாவர வகைகள் உள்ளிட்ட மரங்கள் கட்டமைப்புகளை ஒலி மாசு பாதிப்பிலிருந்து பாதுகாப்பதாக அறியப்பட்டுள்ளது. அந்த இரு கட்டிடங்களிலும் உள்ள 20 ஆயிரம் மரங்கள் சுமாராக ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் கிலோவுக்கும் மேலாக கார்பன்-டை ஆக்ஸைடு வாயுவை ஆக்ஸிஜனாக மாற்றுவதாக அறியப்பட்டுள்ளது.
கச்சிதமான மரங்கள் தேர்வு
எவ்வகை மரங்கள் மரங்கள் அல்லது செடி வகைகளை வளர்த்தால் கட்டிடத்திற்கு பாதிப்பில்லாமல் இருக்கும் என்பது பற்றி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிட வடிவமைப்பாளர்கள் ஆய்வு செய்து அதன்படி செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு தேர்வு செய்து அமைப்பட்ட மரங்கள் உள்ளிட்ட செடிகளுக்கு முறையாக தண்ணீர் மற்றும் உரங்கள் இடுவது போன்ற பணிகளை தினமும் மேற்கொள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கட்டமைப்பில் உள்ள மரங்கள் ஒருவேளை பூமியில் வளர்ந்திருக்கும் பட்சத்தில் அதற்கு சுமாராக 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடம் அதாவது 2 லட்சம் சதுர அடிகளுக்கும் அதிகமான இடம் தேவைப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *