வெறுக்கப்பட்ட ராணியின் முத்து மாலை 365 மில்லியன் டொலருக்கு ஏலம்
பிரான்ஸ் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ராணியான மேரி ஆன்டொவ்னெட்டின் முத்து மாலை 36 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதற்கு முன்பாக ஒரு முத்துமாலை இந்த அளவு தொகைக்கு எடுக்கப்பட்டதில்லை.
ஆஸ்திரேய இளவரசியான மேரி ஆன்டொவ்னெட் பிரான்ஸ் அரசர் பதினாறாம் லூயிஸை மணந்தார். மக்கள் ஒரு வேளை உணவுக்காக சிரமப்பட்டு கொண்டிருந்த போது, இவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார் என பிரான்ஸ் மக்களால் தூற்றப்பட்டார். பிரஞ்ச் புரட்சிக்கு மக்களின் இந்த கோபங்களும் ஒரு காரணம். பிரஞ்ச் புரட்சியின் போது 1793ஆம் ஆண்டு கில்லட்டின் கொண்டு இவர் கொல்லப்பட்டார் .