முள்ளிவாய்க்கால் சென்றார் தொல்.திருமாவளவன்

தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இதன்போது அவர், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அத்துடன், வடமாகாண மரநடுநகை மாத நிகழ்விலும் பங்கேற்றிருந்தார்.

நேற்றிரவு அவர் முல்லைத்தீவுக்குச் சென்று இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் வணக்கம் செலுத்தினார்.

முன்னதாக நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய தொல். திருமாவளவன், வரப்போகும், நாடாளுமன்றத் தேர்தலை அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து எதிர்கொள்வதே, தமிழ் மக்களுக்கு நன்மையளிப்பதாக இருக்கும் என்று தான் கருதுவதாக தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து தமது பலத்தை வெளிப்படுத்தலாம் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்டுச் செயற்படுவது முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *