குருணாகலையில் களம் குதிக்கிறார் மஹிந்த – போட்டிக்கு பொன்சேகாவை களமிறக்க முடிவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறையும் குருணாகல் மாவட்டத்திலேயே களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, ரோகித அபேகுணவர்தன மேற்படி தகவலை வெளியிட்டார்.
சமல்ராஜபக்ச, நாமல்ராஜபக்ச ஆகியோர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதாலேயே மஹிந்த, கடந்தமுறைபோல் குருணாகலை மாவட்டத்திலேயே போட்டியிடவுள்ளார் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக சரத்பொன்சேகாவை குருணாகலை மாவட்டத்தில் களமிறக்குவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி உத்தேசித்துள்ளது. இராணுவத்தினரதும், அவர்களினது குடும்பங்களினதும் வாக்குவங்கியை குறிவைத்தே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.