யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் முழ்கிப் பலி !

பலாங்கொடை – பெலிஹுல் ஓயாவில் குளிக்கச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பெலிஹுல் ஓயாவில் பஹன்குடா குழி என்ற பகுதியில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் இன்று முற்பகல் 10.30 அளவில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *