வாட்ஸ்அப்பில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

வாட்ஸ்அப் , பேஸ்புக் நிறுவனத்தின் கைகளுக்குச் சென்ற பிறகு அதில் சேர்க்கப்பட்ட வசதிகள் சற்று அதிகம்தான். பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல வசதிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள் மற்றும் கூடிய விரைவில் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படவுள்ள வசதிகள் இவைதாம்.

பிரைவேட் ரிப்ளை

வாட்ஸ்அப்பில் அண்மையில் சேர்க்கப்பட்ட வசதிகளில் இதுவும் ஒன்று. ஒரு குரூப்பில் மெசேஜ் அனுப்பும்போது அதை அந்தக் குரூப்பில் உள்ள அனைவருமே பார்க்க முடியும். வாட்ஸ்அப்பில் குரூப் என்பதே அதற்காகத்தான் என்றாலும் சில சமயங்களில் இது சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு.

எடுத்துக்காட்டாக ஒரே ஒருவருக்கு மட்டும் ஒரு தகவலை தெரியப்படுத்த வேண்டும் என வைத்துக்கொண்டால் அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் குரூப்பில் அனுப்புவது முடியாத விஷயம். ஆனால் தற்பொழுது பிரைவேட் ரிப்ளை வசதி மூலமாகக் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் தனியாக மெசேஜை அனுப்பலாம். அதை வேறு யாரும் பார்க்க முடியாது. நீங்கள் பீட்டா (Beta) பரிசோதனையாளர் என்றால் இந்த வசதியை இப்பொழுதே பயன்படுத்திப் பார்க்க முடியும். இந்த வசதி தற்பொழுது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பீட்டா பரிசோதனையாளர்களுக்கு மட்டும் கிடைத்த இது இறுதியாகக் கொடுக்கப்பட்ட அப்டேட்டிற்கு பிறகு பெரும்பாலோனோருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக வாட்ஸ்அப்பில் எதிர்பார்க்கப்பட்ட வசதி இது. தற்பொழுது சிலருக்கு பிறர் அனுப்பும் ஸ்டிக்கர்களை பார்க்க முடிந்தாலும், அனுப்ப முடியாமல் இருக்கிறது. இது அடுத்தடுத்த அப்டேட்களில் சரி செய்யப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் வந்த வேகத்திலேயே சர்கார் விஜய் வரை அப்டேட்டாக இருக்கிறது ஸ்டிக்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *