சினிமாப்பாணியில் கொள்ளையடித்த 5 இளைஞர்கள் கைது – உயிர் தப்பினார் இரத்தினக்கல் வியாபாரி!

இரத்தினக்கல் வியாபாரியொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரிடமிருந்த ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் (650,000.00) ரூபா பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில், ஐந்து இளைஞர்கள் பிபிலைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


பிபிலைப் பகுதியின் இலுகாபத்தனை என்ற இடத்தில் 01-11-2018ல் மேற்படிக் கொள்ளை இட்பெற்றுள்ளது.

இலுகாபத்தனையைச் சேர்ந்த ஒருவரிடம் பெறுமதிமிக்க இரத்தினக்கல்லொன்று இருப்பதாக மெதகமையின் இரத்தினக்கல் வியாபாரியிடம் கூறியதும், அவ் வியாபாரி தனது சகோதரனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.

அவ்வேளையில் அங்கு வந்த சிலர், இரத்தினக்கல் வியாபாரியை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி, அவரிடமிருந்த ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.கொள்ளையில் ஈடுபட்ட அனைவருமே கத்தி, பொல்லுகளுடன் முகமூடி அணிந்தவர்களென்றும் தெரிய வந்துள்ளது.

கொள்ளை குறித்து, பணத்தை பறிகொடுத்த இரத்தினக்கல் வியாபாரியும், அவரது சகோதரனும் பிபிலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பபடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட தீவிர புலனாய்வின் பின்னர், சந்தேகத்தின் பேரில் ஐந்து இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

பிபிலை பொலிஸ் நிலையப் பொறுப்பதினாரி ஏ.பி. வெதகெதர தலைமையிலான குழுவினர், மேற்படிக் கொள்ளை குறித்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், பிபிலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

எம். செல்வராஜா பதுளை நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *