கலருக்காகவே பலரும் என்னை தேடிவருகின்றனர் – நடிகை ஐஸ்வர்யா

முன்னணி இயக்குனர்கள் பலர் என் கலருக்காகவே என்னை தேடி வந்து வாய்ப்பு தருகிறார்கள் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது தத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர்தான். இப்படியிருக்கையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  2011ல் தமிழ் சினிமாவில ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இருந்தாலும் ‘காக்கா முட்டை’ படம்தான் இவரை வெளியுலகிற்கு அதிகமாக அறிமுகப்படுத்தியது. அதையடுத்து அவர் விஜய்சேதுபதி உட்பட பலரும் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது அவருக்கு முன்னணி இயக்குனர்களே பலரும் தேடிச்சென்று வாய்ப்பு வழங்குகின்றனர். அது ஏன் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “இயக்குனர்கள் விஷயம் இல்லாமல் என்னைத் தேடி வரமாட்டார்கள். என் தோல் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் தமிழ் முகம். நம் உடம்பின் நிறம் கருப்பு. அதுதான் நமக்கு ‘அழகு’. அந்த ஒரே காரணத்திற்காகத்தான் என்னை அவர்கள் தேர்வு செய்கிறார்கள்’’ என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *