பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான  பயிற்சி பட்டறை

பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான  பயிற்சி பட்டறை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, நேற்று (21) துல்ஹிரிய, மாஸ் அதெனா நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

நாடளாவிய ரீதியில் 300 இற்கும் அதிகமான விசாரணை அதிகாரிகள் இவ்வதிவிட பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி அனுர பண்டார மெத்தேகொட, பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர், நிர்வாகப் பணிப்பாளர் நிஃமத் டீன், நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி அன்சில், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *